கதை என்பது நம் சிந்தனையை வளர்க்க கூடிய ஒன்று. முன்னாடி எல்லாம் வீட்டில் பாட்டி, தாத்தா என கூட்டுக் குடும்பமாக இருந்ததால், குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம் இருந்து வந்தது. பாட்டி தாத்தா பேசுவதே கதை போல தான் இருக்கும். அந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை எல்லாம் குழந்தைகள் அறிய வேண்டியது அவசியம். இப்போது எல்லாம் பாட்டி தாத்தாக்கள் எதோ ஓர் இடத்தில் தங்கள் கடைசி காலத்தை முடித்து விட்டு உலகத்தை விட்டு செல்கின்றனர்.
குழந்தைகளுக்கு கதை கேட்பது என்பது ஒரு விசேஷம் போல. அதைக் கொண்டாடும் குழந்தைகள் அநேகம். உங்களைப் பார்த்து முறைக்கும் குழந்தைகளை ஒரே நிமிஷத்தில் கவர, கதை சொல்லுங்கள். அவர்களுடைய எண்ணங்கள் வளர்ச்சி பெறுகின்றன. கதை கேட்ட குழந்தைகளுக்கு, அந்த கதையிலுள்ள கதாபாத்திரம் போல மாற ஆசை வந்து, கனவுகளைக் கொடுக்கிறது.
பாட்டி தாத்தாக்கள் இருந்தால் மிக்க நன்று. ஏனென்றால் அவர்களுக்கும் பொழுது போக வேண்டும் என்று வரிந்து வந்து கதை சொல்வார்கள். வேலை செய்யும் நபர்களிடம் சொந்த கதை சோகக் கதை தான் வருகிறது. ஆனால், வேலை செய்த சூழலை விட்டுவிட்டு உங்கள் குழந்தைக்கு ஒரு சின்ன கதை கூறி பாருங்களேன், உங்களுடைய அலுப்பு எங்கோ பறந்து செல்வதை உணர்வீர்கள்.
kadha sola poren nu solitu inga oru kadhayum kanumae ?! ;) :P
ReplyDeleteஇன்னைக்கு தான முதல் நாள்.. அதுனால ரொம்ப பேச வேணாம்னு கம்மியா சொன்னேன் :) உங்களுக்கும் படிக்க சளைக்க கூடாது பாத்தீங்களா?
Deleteகதை நல்லா இருக்கு.. நான் சொன்னது உங்க கதை.. இப்பவும் கிராமத்துல கதைகள் சொல்றாங்க.. ஆனா என்ன ஒண்ணுனா, கதை கேட்குற வயசு குழந்தைகளுக்கு குறைஞ்சுடுச்சு.. நாங்க எல்லாம் 10வயசு வரைக்கும் கதை கேட்டவங்க., ஆனா இப்ப எல்லாம் 7வயசுக்கு மேல கதை கேட்குற பழக்கம் குழந்தைகளுக்கே இல்ல.. எல்லாம் காலமாற்றம்.. இன்டர்நெட், வீடியோ கேம், டிவி, கார்ட்டூன் னு மாறிடுச்சு.. தாத்தா பாட்டியே கதை சொல்ல வந்தாலும் இவங்க கேட்குற நிலைமைல இல்ல.. சொல்லபோனா கதை கேட்குற, சொல்ற பழக்கமே அழிஞ்சுடுச்சு.
ReplyDeleteஇதை பற்றி நிறைய சொல்ல வேண்டி இருக்குது முல்லை. மூன்று பத்திகளுக்கே கண்களை விரிக்கும் பலருண்டு :) எனவே தான் இன்றைக்கு இதோடு நிறுத்திக் கொண்டேன். மனிதர்களை விட குழந்தைகளின் வாழ்க்கையை, கணிணிகளும் தொலைக்காட்சிகளும் திருடி சென்றது கசப்பான உண்மை... இதைப் பற்றி வரும் நாட்களில் பதிவு செய்கிறேன் :)
Deleteகதை கேட்டல் என்பது, குழந்தைகளின் உரையாடும் திறனையும் கவனிக்கும் ஆற்றலையும் அதிகப்படுத்தும். தவிர, தாத்தா, பாட்டியோடு அன்னியோன்னியமும் வளர்க்கும்.
ReplyDeleteஉங்களுடைய கதைகளை இந்த வாரம் திருநெல்வேலியில் இருக்கிற என் உறவினர் குழந்தைகளுக்கு கொடுத்து அன்னியோன்யத்தை இன்னும் வளர்க்க போகிறேன் சார்.. நன்றி :)
Delete